எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் | #SPB #MSV | #LakshmanSruthi @ColorsTamil ​

2,972,727
0
Published 2021-01-15
Song: எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..
A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.

Follow us :
FB: www.fb.com/lakshmansruthi
Instagram: www.instagram.com/lakshmansruthimusicals

For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com

Lyrics:
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரி ஓ ............

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

காலம் சல்லாப காலம் ஓ
உலகம் உல்லாச கோலம்
இளமை ரத்தங்கள் ஊறும்
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்ப மயம்
தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயர பறந்து கொண்டாடுவோம்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரி ஓ ............

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

ஹ காலை ஜப்பானில் காபி
மாலை நியூயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி
இதுலே நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்
உலகம் நமது பாக்கெட்டிலே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்லே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய விடிய கொண்டாடுவோம்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரி ஓ ............

ஆடை இல்லாத மேனி
அவன் பேர் அந்நாளில் ஞானி
இங்கோ அது ஒரு ஹாபி
இனிமேல் எல்லோரும் பேபி
வெட்கம் துக்கம் தேவை இல்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
கம் ஆன் எவரிபடி
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
ஜாயின் மீ
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரி ஓ ............

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கம் ஆன் எவரிபடி ஜாயின் together
ஹே ஹே ஹே ஹ ஹ ஹ.

All Comments (21)
  • மக்களிடம் இப்படி ஒரு ஆரவாரம் எந்த ஒரு பாடகருக்கும் கிடைக்காது. அது இவருக்கு மட்டுமே கிடைக்கும்.S.B.P. இந்த மூன்று எழுத்து மந்திரம் மக்களை என்றும் கட்டிப்போடும்.
  • @licdurai5211
    கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே கலக்கிய மகா கலைஞன் MSV வாழ்க MSV புகழ்
  • மக்களின் மனம் கவர்ந்த பாடகர். ஆரவாரம் மகிழ்ச்சி உங்களைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது.நன்றி. ஸார்
  • @getrelax744
    இன்று கூட கேட்டேன்.இனிமேலும் கேட்பேன்....நீங்களும் கேட்டால்...like பண்ணவும்🙏👍🏻
  • ராட்சசன்.... எங்கள் இதயங்களை... இசை பிரியர்களை தின்றவன்...
  • நீங்கள் இறந்து விட்டதாக கூறினால் அது அறியாமை எங்களின் மூச்சு உள்ளவரை ஒவ்வொருத்தர் வாழ்விலும் நீங்கள் இருப்பீர்கள்
  • சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம் மற்றவரை சந்தோசபடுத்துவது தான் அதை தான் SPB அவர் வாழ்நாள் முழுவதும் கடை பிடித்து வந்தார்
  • 40 வயது ஆகிறது இந்த பாடலை கேட்கும் போது டான்ஸ் ஆட தோணுது
  • எத்தனை முறை கேட்டாலும் பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகம் மேல் ஓங்குமே தவிர ஆனந்தத்திற்கு வயது வித்தியாசம் இன்றி ரசித்த கூட்டத்தில் நாம் இனைந்திடுவோம்
  • @user-gm7dz7ik7c
    மிகவு‌ம் அற்புதமான பாடகர்.சகல கலாவல்லவர். ❤❤❤
  • @avinashm7252
    இது போல் இசை கேட்டு ரொம்ப நாள் ஆகுது.. இனி இப்படி பாட ஒருத்தர் பிறக்க போவதில்லை ❤️
  • @banumathi5898
    சங்கீத சக்கரவர்த்தி ஐயா நீ. உன் பாடலைக் கேட்க கடவுள் எங்களிடமிருந்து பிரிச்சுட்டார் போல
  • @Manikpu7
    யார் பாடிய பாடல் என்றாலும் Spb பாடும் போது பாடலே vera level 🎉🎉🎉
  • இதுபோல் ஒரு பாடல் பாட யாரும் பிறக்கப் போவதுமில்லை உங்கள் குரல் மறையப் போவதில்லை
  • Miss you SPB sir.....😭😭அழியாத பாடல்களை உலகிற்கு பாடியவர்.... . அதுவும் 90 s kids க்காக நிறைய பாடல்களை பாடியவர்......... உங்கள் பாடல்களை கேட்காதவர்கள் யாராவது இருக்க முடியாமா? உங்கள் குரலை மறக்க முடியாது.....
  • @nagarajan6674
    SPB மனித உலகில் பிறந்த மாபெரும் தெய்வபிறவி..... உங்களை மீண்டும் காண ஆசை.....நீங்க எப்போதும் எங்களுக்குள் வாழ்கிறீர்கள் ஐயா...உங்களை நேரில் நான் பார்த்ததில்லை அதற்காக ரொம்ப வருந்துகிறேன்....அழுகிறேன் சில நேரங்களில்....உங்கள் குரலை நான் எப்போதும் கேட்கிறேன்...ஏனோ தெரியவில்லை இப்போது உங்களை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்.... இழந்தது உங்கள் சரீரத்தை இழக்க முடியாதது உங்கள் குரலை தெய்வமே...
  • @malai09
    S.P.B & Vivek sir.. We miss both of you... No one can replace ur place and no one can live like with great humanity
  • SPB ஜயா என்றும் உங்கள் நினைவாக நாங்கள்
  • @sm9214
    70களின் பிற்பகுதி. இதோ கடைகளுக்கு, ஸ்கூலுக்கு போகும் போது கேட்பது போலுள்ளது. எல்லோருக்கும் அந்த நாட்கள் இப்போது நடப்பது போல் ஒரு உணர்வு. எங்கள் அன்றாட நாளோடு கூடவே வந்த குரல்.