நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே | ரிதம் | அர்ஜுன் | ஜோதிகா | ஏ.ஆர்.ரகுமான் | Pyramid Audio

22,774,363
0
Published 2021-10-19
Hey everyone! If you are a die-hard fan of A.R. Rahman's Tamil songs, we bring you an evergreen hit melody song, "Nadhiye Nadhiye," that you must have in your playlist.

The song from the musical-drama movie "Rhythm" featuring Arjun and Meena streams at Pyramid Audio. Watch and enjoy the beautiful song!

Song: Nadhiye Nadhiye
Singer: Unni Menon
Music: A. R. Rahman
Star Cast: Arjun, Meena
Lyricist: Vairamuthu
Director: Vasanth
Producer: Pyramid Natarajan

ரிதம் - நதியே நதியே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு
ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...
கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா


In Association with Divo Music
Twitter: twitter.com/divomusicindia
Facebook: www.facebook.com/divomusicindia
Instagram: www.instagram.com/divomusicin...

--------------------------------------------------------------------------------------------------

Facebook : www.facebook.com/divomovies/
Twitter : www.twitter.com/divomovies/
Instagram : www.instagram.com/divomovies/
Telegram : t.me/divodigital

#NadhiyeNadhiyeSong #NadhiyeNadhiye #RhythmSongs

All Comments (21)
  • இந்த பாடலை 2023 யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!
  • 😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
  • @Nithish_NK
    இந்த பாடலை 2024யிலும் கேட்டு ரசிப்பவர்கள்👍❤️✨
  • ஆக்சென் கிங் அர்ஜுன் ரசிகர்கள் ஒரு லைக் போடலாமே ❣️❣️❣️👍👍👍
  • வாழ்கையின் தத்துவத்தையும் பெண்ணின் அழகையும் நதியின் சிறப்பையும் உணர்த்தும் பாடல் 🤩🎧💥
  • @TheVagheesan
    இந்த பாடலை 2024 யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!
  • @musthafa1998
    தனிமையில் கேட்பவர்களுக்கு, வலியுடன் சிறு புன்னகை....🥲
  • ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல் அல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாய் அல்லோ ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் & பெண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே ஆண் : வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே ஆண் : { தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஆண் : ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே ஆண் : தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே ஆண் : பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும் ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2)
  • ஒரு பெண்ணை ஆழமாக நேசிப்பவர்களுக்கு தான் தெரியும் இத்தனை வரிகள் எத்தனை கவிதைகள் இத்தனை நயங்கள்
  • @prabhamsd4901
    ❤ nee irundhal enna pirindhal enna kadhal enaku podhum ......
  • காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே எத்தனை அழகான வரிகள்
  • @Earth30sec
    என்ன அழகான location..என்ன அழகான Cinematography.. இந்த பாடலை வசந்த் சார் ரொம்ப ரசித்து எடுத்திருக்கிறார்..❤
  • இந்த உலகத்தில் எதை மறந்தாலும் வைரமுத்துவின் வைரமன வரிகளை மறக்க முடியாது who love vairamuthu lyrics ❤❤
  • காதலி ❤❤❤அருமை பிரிவில் மனைவி அருமை மறைவில் நீரின் அருமை❤❤❤❤அறிவாய் கோடையிலே❤❤❤
  • @athithya3854
    தீங்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே இந்த ஒரு வரிக்காக உயிரையும் விடலாம்❤❤❤❤❤❤❤❤❤❤
  • "நீர் நினைத்தால் , பெண் நினைத்தால் , கரைகல் யாவும் கரைந்து போக கூடும்"🔥🔥🔥🔥🔥🔥 thank god i born in such a butiful era...
  • Intha maathiri lyrics eluthuravanukku life time settilement daa.....🔥🔥🔥
  • @venkats1092
    நதி தாயை தமிழை தவிர வேறு எந்த மொழியாலும் இவ்வளவு அழகாக வர்ணிக்க இயலாது🥰😍🔥🔥🔥🤗
  • இந்த பாடலை என் பத்தாம் வகுப்பு ஆசிரியை அவ்வளவு அழகாக பாடுவார்.......✨❤️❤️💎2018..…..
  • இந்த பாடலை மற்ற மொழிகளில் கேட்பதை விட நம் தாய் மொழி தமிழில் கேட்பதே தனி சுகம் ..........♥️😇✨