Senthazham Poovil Song With Lyrics | Mullum Malarum | K J Yesudas Hits | Ilaiyaraaja

2,828,679
1,436
Published 2019-07-08

All Comments (21)
  • @babuamudhan5854
    முள்ளும் மலரும் திரைப்படத்தில் இடம் பெற்ற செந்தாழம் பூவில் எனும் பாடல் கவியரசர் கண்ணதாசன் இறுதிக் காலங்களில் எழுதியது. பொதுவாக காதலையும், குடும்ப உறவுகளையும், சமூகத்தையும், சோக ரசத்தையுமே பாடிவந்த கவிஞர் இப்பாடலில் இயற்கையை இனிமையாக பாடியுள்ளார். வரிகளை கவனியுங்கள். "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா, பூ வாசம் மேடை போடுதம்மா, பெண் போலே ஜாடை பேசுதம்மா, அம்மம்மா ஆனந்தம்." பூவின் வாசத்தால் இனம் புரியாது வரும் மயக்க உணர்வினை பெண்கள் கண்களால் பேசும் ஜாடை மொழியுடன் ஒப்பிடுகிறார். அடுத்த வரிகள் "வளைந்து வளைந்து செல்லும் பாதை மங்கை மோகக் கூந்தலோ, மயங்கி மயங்கிச்செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ, ஆலங்கிளை மேலே கிளி தேன் கனிகளை தேடுது, ஆசைக்குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது, காடுகள் மலைகள் தேவன் கலைகள்." மலைப்பாதையை மங்கையின் கூந்தலுக்கும், வெள்ள நீரை அவளின் ஊடலுக்கும் ஒப்பிடுகிறார். அடுத்து வரும் வரிகளின் அற்புதத்தை பாருங்கள், குயில் பாடலின் மொழி அறியாவிட்டாலும் அதுவும் ஒரு ராகம் போன்றே உள்ளதாக வியக்கிறார். என்னே கவிஞரின் ரசனை. அடுத்து வரும் வரிகளை பார்ப்போம் " அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள், ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள், பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன், பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி " மலையின் மீது படிந்துள்ள மேகங்கள் ராஜகுமாரியாம் அவள் தனது சேலையைக் கொண்டு மலையினை மூடுகிறாளாம். கவிஞனின் உருவகம், அற்புதம். இனி வரும் வரிகள் தான் இப்பாடலின் உச்சம், பாருங்கள் இதை, "இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை, இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை, ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது, உள்ளே வரும் வெள்ளமொன்று எங்கோ என்னைக் கூட்டுது, மறவேன் மறவேன் அற்புதக் காட்சி " இச்சரணத்தின் தொடக்க வரிகளை பாருங்கள் மலையில் தொடங்கும் வசந்த காலத்தை "இளைய பருவம்" என்கின்றார், மனிதரின் இளமைக் காலம் தான் பயமறியாதது, துள்ளலான உணர்வுகளை உடையது, கொண்டாட்டமானது. இதனை மலையின் குளிர் வசந்தத்துடன் ஒப்புகிறார், இளைய பருவம் என்ற ஒரு சொல்லில் ஓராயிரம் பொருள்கள், கவிஞனின் கற்பனையை நினைக்க நினைக்க இனிமை, அற்புதம். இயற்கையை இதை விட சிறப்பாய் பாடிட முடியுமா? கவிஞனின் உவமை நயம் அழகே அழகு. வடமொழிச் சொல்லும் கலந்திட்ட மணிப்பிரவாள அற்புதம். கவிஞனின் வரிகளுடன் கலந்திட்ட இசைஞானியின் இசையும் அற்புதம். நான் அறிந்த திரையிசையில் சிகரம் தொட்ட பாடல் இது தான்.
  • இப்போது எனக்கு வயது 55 இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பழைய ஞாபகங்கள்.. கல்லம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம்... இனி வருமா?? 😌🥺😢
  • @nausathali8806
    இயற்கையோடு பயணம் செய்யும் இசை ஞானியின் இனிமையான இசையோடு... கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதையை, கானகத்தில் ஒலிக்கச்செய்யும் கானகந்தர்வனின் காந்தக்குரல். இனிமேலும் வரப்போவதில்லை இதுபோன்ற ஒரு இனிமை...! தான் நடித்த படங்களில் தனக்கு பிடித்தபடமென்று "சூப்பர் ஸ்டார்" சொன்னது...! உலகத்தரமிக்க இயக்குனர் மகேந்திரன் அவர்களின் உன்னதபடைப்பு, "முள்ளும் மலரும்" அபூர்வம்.
  • @venkatp594
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள்......
  • இன்று 62 வயதாகிறது இன்றும் இந்த பாடலை கேட்கும்போது என்றும் இளமையாக இருப்பது போன்ற உணர்வு. அன்று இப்பாடல் எப்போதும் ஹம்மிங் செய்து கொண்டு இருப்பேன். என் தாய் சில நேரங்களில் ரேடியோவில் கேட்க நேறும்போது என் மனைவியிடம் நினைவு கூர்வார்களாம் இப்போதும் கேட்க நேர்த்தால் அன்று அம்மா சொன்னார்கள் என்பதை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
  • @jagadesank3904
    எக்காலத்திலும் அழியாத அளிக்க முடியாத பாடல்களில் இதுவும் 💌💌✨ஒன்று 🎵🎵 ✨எனக்கு பிடித்த பாடல் 🎵🎵 ✨என்னைக் கவர்ந்த மிக முக்கியமான பாடல் 🎵🎵 ஜேசுதாஸ் அவர்களின் ✨மழையில் நனைந்த பாடல்🎵🎵
  • @dilshath2432
    யேசுதாஸ் ஐயா அவர்களின் குரல் ஷோபாவின் நடிப்பு அந்தக் கால ஞாபகங்கள் மறக்கவே முடியாது அந்த நாட்களை..
  • இந்தப் பாடலை இதே போல வாகனத்திலோ பஸ்ஸில் பயணம் செய்யும்போது கேட்டுக்கொண்டே சென்றால் மிகவும் அருமையாக இருக்கும்
  • Appa என்ன அருமையான கவிதை வரிகள், காதுக்கு enimai
  • @d.p.m5361
    இந்த பாடலும் இதில் வரும் காணொளியும் பார்க்கும் போது என் கணவர் இல்லாத ஏக்கத்தை தருகிறது கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
  • @Jebaraj-fy8nh
    எல்லா இடங்களிலும் தென்றல் வந்தாடிவிட்டது 🎉
  • @kannanms3146
    திரு.ஜேஏசுதாஸ்.அவர்களின்.குரலுக்கு.யாரும்வரமுடியாது.அதுக்குஇந்தபாடல்ஒன்றே.போதும்.
  • Ever Green & Fantastic song!🎉👏👏👏👏👏 என் சிறிய வயதில் இந்தப் பாடல் பேட்டால் மனம் வேகமாகப் பறக்கும்! இப்ப வேகமாக பறக்கவில்லை என்றாலும் சின்ன வேகம் பெரியதாகி மகிழ்வுடன் பறக்கிறது!
  • @mersaldurai1007
    இந்த பாடல் பிடிக்கவில்லை என்று சொல்லுவதற்கு இந்த உலகில் யாரும் இல்லை !!!!
  • மிகவும் அருமை இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
  • @umasankar9487
    Yes sivam covai, இது வரை யாரும் பிறக்கவில்லை. JAI HIND