போவோமா ஊர்கோலம் பாடல் | Poovoma Oorgolam song | Swarnalatha, S. P. Balasubrahmanyam love song .

2022-10-06に共有
#prabhu #kushboo #ilayaraja #tamilsongs #vaali #4koldsongs
போவோமா ஊர்கோலம் பாடல் |Poovoma Oorgolam song | Swarnalatha, S. P. Balasubrahmanyam love song . Tamil Lyrics in Description .
Movie : Chinna Thambi
Music : Ilaiyaraaja
Song : Poovoma Oorgolam
Singers : Swarnalatha, S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

விஷ்லிங் : …………………

பெண் : போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும் ஓடும்
பொன்னி ஆறும் பாடும்
கானம் நூறும் காலம்
யாவும் பேரின்பம் காணும்
நேரம் ஆனந்தம் போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும்

ஆண் : அரண்மனை
அன்னக்கிளி தரையில
நடப்பது நடக்குமா
அடுக்குமா

பெண் : பனியிலும்
வெட்டவெளி வெயிலிலும்
உள்ள சுகம் அரண்மனை
கொடுக்குமா

ஆண் : குளுகுளு
அறையில கொஞ்சிக்
கொஞ்சி தவழ்ந்தது
குடிசைய விரும்புமா

பெண் : சிலுசிலு
சிலுவென இங்கிருக்கும்
காத்து அங்க அடிக்குமா
கிடைக்குமா

ஆண் : பளிங்கு போல
உன் வீடு வழியில
பள்ளம் மேடு

பெண் : வரப்பு மேடு
வயலோடும் பறந்து
போவேன் பாரு

ஆண் : அதிசயமான
பெண்தானே

பெண் : புதுசுகம்
தேடி வந்தேனே

ஆண் : போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும் ஓடும்
பொன்னி ஆறும் பாடும்
கானம் நூறும் காலம்
யாவும் பேரின்பம் காணும்
நேரம் ஆனந்தம் போவோமா
ஊர்கோலம் பூலோகம்
எங்கெங்கும்

பெண் : கொட்டுகிற
அருவியும் மெட்டுக்கட்டும்
குருவியும் அடடடா அதிசயம்

ஆண் : கற்பனையில்
மிதக்குது கண்டதையும்
ரசிக்குது இதிலென்ன
ஒரு சுகம்

பெண் : ரத்தினங்கள்
தெறிக்குது முத்துமணி
ஜொலிக்குது நடந்திடும்
நதியிலே

ஆண் : உச்சந்தல
சொழலுது உள்ளுக்குள்ள
மயங்குது எனக்கொன்னும்
புரியல

பெண் : கவிதை பாடும்
காவேரி ஜதிய சேர்த்து
ஆடும்

ஆண் : அணைகள் நூறு
போட்டாலும் அடங்கிடாமல்
ஓடும்

பெண் : போதும் போதும்
உம் பாட்டு

ஆண் : பொறப்படப்
போறேன் நிப்பாட்டு

பெண் : போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

ஆண் : ஓடும் பொன்னி
ஆறும் பாடும் கானம்
நூறும்

பெண் : காலம் யாவும்
பேரின்பம் காணும் நேரம்
ஆனந்தம்

ஆண் : போவோமா
ஊர்கோலம்

பெண் : பூலோகம்
எங்கெங்கும்

コメント (21)
  • @t4trendstamil
    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை ரசித்து கொண்டுள்ளீர்கள்❤
  • @yokeshpp
    இந்த மாதிரி படங்கள், பாடல்கள் இப்போது வருவதில்லை.
  • 1991 ஆம் ஆண்டு தஞ்சை ராணி தியேட்டரில் படம் பார்த்தேன் அந்த நாள் எனக்கு மீண்டும் வருகிறது... Miss you old life மீண்டும் வா அன்பே....
  • இந்த படம் இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் பார்த்தேன் 1991வதுவருடம்பார்தநினைவு
  • இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சூப்பர் பாடல் வரிகள் அருமை யான
  • சாத்தூர் ஸ்ரீ தனலட்சுமி திரைஅர ங்கத்தில் 1991 ல் எனது 14வது வயசுல பார்த்தது
  • சுவர்ணலதாவின் நியாபகம் வருடும் போதெல்லாம், இந்த பாடல் சற்றே இளைப்பாற்றல். நல்ல குரல் வளமிக்க இசையரசி, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்தது மிக வருத்தம்.
  • பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண்: அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பெண்: பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா ஆண்: குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா பெண்: சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு பெண்: வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு ஆண்: அதிசயமான பெண்தானே பெண்: புதுசுகம் தேடி வந்தேனே ஆண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ஆண்: கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே ஆண்: உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல பெண்: கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும் பெண்: போதும் போதும் உம் பாட்டு ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் பெண்: காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் ஆண்: போவோமா ஊர்கோலம் பெண்: பூலோகம் எங்கெங்கும்
  • வயக்காட்டை பார்த்தால் இந்த பாட்டு நினைவு வரும்
  • @no_worries07
    Comments la padikkiradhukku romba nalla memories ah irukku😌 old is gold forever and Miss that villages sides life😞
  • ஞாயிறு சாங்கியாலம் ஒரு படம் ஆடியோ வரும். மனதில் படம் ஓடும். சூப்பர் அது எல்லாம்
  • 1991ல்இந்தபடம்நாயுடுமங்கலம்திரைஅரங்ஙம்S.A.Cபார்த்தேன்...அருமை..பழயஞபகம்வருது
  • இந்த படம் விருத்தாசலம் சந்தோஷ்குமார் தியேட்டரில் பார்த்தது.அப்போது +2 படிக்கிறேன்.
  • எங்கள் ஊர் பவானிசாகர் அணையில் எடுத்தது.... எஸ்.பி.பி மற்றும் செர்ணலதா இரு இசை தெய்வங்கள் பாடிய பாடல்....
  • @apachirtr1806
    தமிழில் மட்டும் இது போல ரசனைகளை காணலாம்! ஏனென்றால் கேள்விக்கு பதில் சொல்வது போல இருக்கும் இந்த பாடல்❤
  • @EthirajTamizh
    2023 ல யாருலாம் இந்த பாட்ட கேக்குறீங்க ❤️